< Back
மாநில செய்திகள்
பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடிப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
14 Dec 2022 1:00 AM IST

குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

வெண்ணந்தூர்:-

குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

குடிநீர் குழாய்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே வடுகம்பாளையம் பகுதி வழியாக தனியார் தொழிற்சாலைக்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கப்படுகிறது. இதனால் சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகிஉள்ளனர்.

எனவே குடிநீர் குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பதிக்கப்பட்ட குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.

இதையடுத்து தனியார் தொழிற்சாலையின் ஊழியர்கள், குடிநீர் குழாயை அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு கலந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்