< Back
மாநில செய்திகள்
சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர்
மாநில செய்திகள்

சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
26 Oct 2023 10:06 AM IST

பேரணாம்பட்டு அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு அருகே உள்ள சி.டி.செருவு ஊராட்சியை சேர்ந்த சப்-ஸ்டேஷன் கிராமத்தில் வாரத்திற்கு ஒருமுறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் பேரணாம்பட்டு - ஆம்பூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து, சி.டி.செருவு ஊராட்சி குடிநீர் ஆபரேட்டரை அழைத்து உடனடியாக குடிநீர் பைப்லைன் கேட் வால்வை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்