< Back
மாநில செய்திகள்
போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
3 Sept 2023 12:10 AM IST

போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தில் போலீசார் சார்பில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை சூப்பிரண்டு வளவன் கருத்துகளை எடுத்துரைத்தார். அப்போது சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும், சாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டும், பெண்களுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

மேலும் செய்திகள்