< Back
மாநில செய்திகள்
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு
மாநில செய்திகள்

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

தினத்தந்தி
|
7 Nov 2023 12:28 PM IST

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

சென்னை,

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். தங்களுக்கு தேவையான, புத்தாடைகள், பட்டாசுகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் கோயம்பேடு தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களிடம் தீயணைப்பு வீரர்கள் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.

மேலும் செய்திகள்