< Back
மாநில செய்திகள்
திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
23 July 2023 1:28 AM IST

திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காவேரிப்பாக்கம்

திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 80-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பஜார் வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் அதன் வகைகள் பற்றியும் எடுத்து கூறினர்.

தொடர்ந்து வளம் மீட்பு பூங்காவிற்கு மாணவர்கள் சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்து கேட்டறிந்தனர்.

பின்பு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இதனை பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், பேரூராட்சி செயல்அலுவலர் சரவணன், பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்