< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
காவலன் செயலி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
|8 July 2022 12:45 AM IST
வி.கைகாட்டியில் காவலன் செயலி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் படி பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள்கூடும் இடங்களில் காவலன் செயலி குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வி.கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் கூடியிருந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் கலந்து கொண்டு காவலன் செயலி குறித்தும், இந்த செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால் தனியாக செல்லும் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் தங்களது செல்போன்களில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.