< Back
மாநில செய்திகள்
உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்: கவிஞர் வைரமுத்து
மாநில செய்திகள்

உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்: கவிஞர் வைரமுத்து

தினத்தந்தி
|
20 Sept 2024 9:52 AM IST

உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற மொழிகள் பேசுவர்.

பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர்; தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர். இந்த நோய்க்கு 'Messianic Delusional Disorder'என்று பெயர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள் உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்