< Back
மாநில செய்திகள்
பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கு 25 மணிநேர கவுண்ட்டவுன் நாளை தொடக்கம்
மாநில செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கு 25 மணிநேர கவுண்ட்டவுன் நாளை தொடக்கம்

தினத்தந்தி
|
28 Jun 2022 7:45 PM IST

சிங்கப்பூர் நாட்டு செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கு 25 மணிநேர கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது.

சென்னை:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் பொறுத்தப்பட்டு உள்ள சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 3 செயற்கைகோள்கள் குறிப்பிட்ட இலக்கில் விண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்ந்து ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து ராக்கெட் ஏவுவதை நேரடியாக பார்ப்பதற்காக பொதுமக்கள் முன்பதிவு இன்று மாலை 4 மணி உடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து முன்பதிவு செய்தவற்களுக்கு முறையாக அழைப்பு அனுப்பப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

மேலும் செய்திகள்