< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிரசார களத்தில் பி.ஆர்.எஸ். எம்.பி-க்கு கத்திக்குத்து.. தெலங்கானாவில் அதிர்ச்சி.!
|30 Oct 2023 7:50 PM IST
கத்தியால் குத்திய நபரை மடக்கி பிடித்த கட்சி தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தெலங்கானா,
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் மக்களவை உறுப்பினர் பிரபாகர் ரெட்டி துப்பாக் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், சுராம்பள்ளி கிராமத்தில் வாக்கு சேகரித்துக் கொண்ட பிரபாகர் ரெட்டியை மர்ம நபர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் வயிற்றில் காயம் அடைந்த பிரபாகர் ரெட்டி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கத்தியால் குத்திய நபரை மடக்கி பிடித்த கட்சி தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தெலங்கானா தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்