< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
|24 Jun 2022 11:14 PM IST
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மதிப்பெண் பட்டியலை அந்தந்த பள்ளிகள் பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியர் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வாங்குவதற்காக பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினர்.