கரூர்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
|பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கரூர் அருகே உள்ள கோயம்பள்ளி கிராமத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், முதல்வரின் முகவரி திட்டம், பெண்களுக்கான இலவச பஸ் திட்டம், புதுமைபெண் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், கூட்டுறவுத்துறை சார்பில் கடன் வழங்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
பொதுமக்கள் அனைத்து துறைகளிலும் என்னென்ன திட்டங்கள் செயல்படுகிறது என்பதை தெரிந்து அந்த திட்டங்களை பெற்று பயன் பெற வேண்டும், என்றார். இதில் 124 பயனாளிகளுக்கு ரூ.85 லட்சத்து 35 ஆயிரத்து 107 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.