< Back
மாநில செய்திகள்
வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
24 May 2023 7:48 PM GMT

தென்காசியில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 10- ந் தேதி "வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்" என்ற பெயரில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி வந்தது. அதில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் கலந்து கொண்டு கொடுக்கும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.

தற்போது ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் "வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0" என்ற பெயரில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மத்திய தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் நடத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டத்திற்கு நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியிலும், தென்காசி மாவட்டத்திற்கு சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு தூத்துக்குடி சிப்காட் திட்டம் மற்றும் நிர்வாக அலுவலகத்திலும் வைத்து நடக்கிறது. இதில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சச்சின் டி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்