< Back
மாநில செய்திகள்
இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
14 Dec 2022 12:50 AM IST

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கை மாநாடு ஒன்றிய செயலாளர் வீரசிங்கம் தலைமையில் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், பெரம்பலூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். முழுமையான சம்பளத்தை கொடுக்க வேண்டும். வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கியில் கறவை மாட்டுக்கடன் வழங்க வேண்டும் என்பன உள்Provide free house plotளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்