< Back
மாநில செய்திகள்
சத்துணவு பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சத்துணவு பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
26 Jun 2022 6:49 PM IST

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடந்தது. வட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சரவணபெருமாள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கண்ணன் கலந்து கொண்டார்.

அப்போது சங்கத்தில் இருந்து ஓய்வுபெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஆரணி, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்