< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
சென்னை
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
1 Sept 2023 11:01 AM IST

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பூர்,

சென்னை ஆர்.கே.நகர், 41-வது வார்டு, எழில்நகர் அடுத்த அன்னை சத்யா நகரில் மேம்பால பணிக்காக தற்காலிக சாலை அமைக்கும் வேண்டி இருந்தது. இதற்காக சாலையோரம் இருந்த சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று காலை பொக்லைன் எந்திரத்துடன் வந்து அந்த வீடுகளை இடித்து அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனங்களை சிறை பிடித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசரையும் முற்றுகையிட்டு தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கொடுங்கையூர் போலீசார் பாதுகாப்புடன், 6 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்