< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
16 Nov 2022 12:27 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கால் ஏழை எளிய மக்களை வெகுவாக பாதிக்கும் பால்விலை மற்றும் மின்சார உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் பஜார் வீதியில் திருவள்ளூர் நகர பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் கருணாகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பா.ஜ.க மாவட்டச்செயலாளர், பாலாஜி, திருவள்ளூர் நகர நிர்வாகி ரமேஷ், ஓ.பி.சி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் மகேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் துணைத் தலைவர் வக்கீல் கோ.சீத்தாராமன், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் பொன்முடி, மாவட்ட மீனவர் அணி பிரிவு தலைவர் சுரேந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாந்த் நன்றி கூறினார்.

அதேபோல மணவாளநகர், பட்டரை பெருமந்தூர், பேரம்பாக்கம் போன்ற பகுதியிலும் பா.ஜ.க. நிர்வாகிகள் பால் விலை மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பால் உயர்வை கண்டித்து ஆரம்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு தொடர்பு பிரிவு மாநிலத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலையரசி, பட்டியல் அணி செயலாளர் ராஜன், கலை மற்றும் கலாசார பிரிவு கிழக்கு ஒன்றிய தலைவி கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதே போல கும்மிடிப்பூண்டி மற்றும் மாதர்பாக்கம் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்தணி நகர பா.ஜ.க. சார்பில் நகரத்தலைவர் சூரி தலைமையில் திருத்தணியில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு குப்பம் பா.ஜ.க. கவுன்சிலர் சரவணன், உடல் உழைப்பு நல வாரிய மாவட்ட தலைவர் கர்ணன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் மில்கா முத்து ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதேபோல் கே.ஜி. கண்டிகை பகுதியில் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டனர்.

எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்லாபுரம் ஒன்றிய தலைவர் எம்.சேகர் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் பரந்தாமன், மாவட்ட வக்கீல்கள் பிரிவு வேல்மாரியப்பன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மஞ்சை பி.எம்.ஆனந்தன், பெரியபாளையம் எம்.எஸ்.பிரபாகரன், ஜெகதீசன், எழில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகராஜ் நன்றி கூறினார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீதஞ்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி கிழக்கு ஒன்றிய தலைவர் பிணாங்கு ராஜேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மஸ்தான், பாபு, பொருளாளர் தனஞ்செழியன், துணைத்தலைவர்கள் நரசிம்மன், பிரேம், சிவா, நிர்மலா, செயலாளர்கள் வேலு, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் சிவராஜ் சுகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய முன்னாள் தலைவர் வேதாசலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மாவட்ட விவசாய அணி கோபி, அமைப்புசாரா மாவட்ட துணைத் தலைவர் வரதராஜன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் பசுபதி, மகளிர் அணி துணைத்தலைவர் சாந்தி, செயலாளர் ஜெயப்பிரியா, இளைஞர் அணி தலைவர் பரசுராமன், பட்டியல் அணி தலைவர் அருள் முருகன், ஒன்றிய அரசு தொடர்பு துறை தலைவர் ஹேமாத்திரி ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.

பொன்னேரி பஜாரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்