< Back
மாநில செய்திகள்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் ராகுல் காந்தியிடம் விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
23 Jun 2022 2:06 PM IST

கும்மிடிப்பூண்டியில் ராகுல் காந்தி மீது வழக்கு போட்ட மத்திய அரசு மற்றும் அமலாக்கதுறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் ராகுல் காந்தியிடம் 5-வது நாளாக அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் விசாரணை செய்யப்பட்டதை கண்டித்து கும்மிடிப்பூண்டி பஜாரில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் மதன் மோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் பிரேம் குமார், சிவா ரெட்டி, ஹேமகுமார், அஸ்வீன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவாறு 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்