< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் - டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடை பணியாளர்கள் அறிவிப்பு
|22 Sept 2023 11:52 PM IST
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை,
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை வரும் அக்டோபர் 2-ந்தேதி முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், முழுமையான இ.எஸ்.ஐ. மற்றும் பி.எஃப். உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.