எண்ணூரில் உர தொழிற்சாலையை மூட வலியுறுத்தி 7-வது நாளாக தொடரும் போராட்டம்
|எண்ணூரில் உரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி 7-வது நாளாக மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எண்ணூர்,
எண்ணூர் பெரிய குப்பத்தில் கோரமண்டல் உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் வாந்தி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதனால் அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மீனவர்கள், மீன்பிடிக்க செல்லாமல் பெரிய குப்பம் பகுதியில் தொழிற்சாலை வாயிலை முற்றுகையிட்டு இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
7-வது நாள்
மீனவர்களுக்கு ஆதரவாக 33 கிராம நிர்வாகிகள் மற்றும் மீனவ பெண்கள் 7 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டம் நடந்து வரும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவரும் மக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், 7-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டு தொழிற்சாலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டத்திற்கு துணை நிற்போம் என கூறினர்.