< Back
மாநில செய்திகள்
மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 2:45 AM IST

கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சோழா மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, ரத்த தான நண்பர்கள் குழு நிர்வாகி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் பத்திரிகையாளர்கள் வீடுகளில் ரெய்டு செய்து அச்சுறுத்திய சம்பவத்தை கண்டித்தும், ஆந்திராவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை செய்து மிரட்டல் விடுத்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என்.ஐ.ஏ அமைப்பை கலைக்க வேண்டும், பொய் வழக்குகளில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காமல், கடைசி நேரத்தில் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்