< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|15 Aug 2023 1:22 AM IST
ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதிய சங்கத்தினர் மண்ணச்சநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வரையறுக்கப்பட்ட, குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறாத சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஊர்புற நூலகர்கள், பட்டு வளர்ச்சித்துறை, தினக்கூலிகள் வன காவலர்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். காலமுறை ஊதிய ஓய்வூதியர்களைப்போல அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மண்ணச்சநல்லூர் வட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு ஆலோசகர் காமராஜ், தணிக்கையாளர் குணசேகரன், அன்பழகன், சவுந்தரராஜன், கலைவாணன், குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.