< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 July 2023 7:45 PM GMT

கொடைக்கானலில் வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பஸ்நிறுத்தத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கொடைக்கானல் வக்கீல்கள் சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமரன், துணைத் தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்றதை கண்டித்து கோஷமிட்டனர். இதில் சங்க இணை செயலாளர்கள் செல்லத்துரை, சைலஜா பொருளாளர் ஏஞ்சல் செரினா உள்பட வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்