< Back
மாநில செய்திகள்
சோனியா காந்தி மீதான விசாரணையை கண்டித்து - எழும்பூரில் இளைஞர் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்
சென்னை
மாநில செய்திகள்

சோனியா காந்தி மீதான விசாரணையை கண்டித்து - எழும்பூரில் இளைஞர் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்

தினத்தந்தி
|
28 July 2022 11:01 AM IST

சோனியா காந்தி மீதான விசாரணையை கண்டித்து எழும்பூரில் இளைஞர் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மீது நடத்தப்படும் அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்நாடு இளை ஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் சென்னை-புதுச்சேரி ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக அவர்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதேபோல் வடசென்னை கிழக்கு மாவட்ட காங் கிரஸ் கட்சி சார்பில் நேற்று வண்ணாரப்பேட்டை டி.எச். ரோடு பெரியபாளையம் அம்மன் கோவில் அருகே வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் சத்தியா கிரக அமைதி வழி போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தடுத்த போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

மேலும் செய்திகள்