< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
|27 April 2023 12:18 AM IST
குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சோமரசம்பேட்டை அடுத்த கீழ வயலூரில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் மின் உதவியாளர் ஞானம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.