< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரையில் திமுக சார்பில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் 23-ம் தேதிக்கு மாற்றம்
|19 Aug 2023 1:20 PM IST
திமுக நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் மதுரையில் மட்டும் வருகிற 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
திமுக நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் மதுரையில் மட்டும் வருகிற 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நாளை நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரத போராட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் திமுகவின் உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.