< Back
மாநில செய்திகள்
குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
1 Oct 2022 2:08 PM IST

குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் 15-வது வார்டான மேட்டுகாலனி பகுதியில் உள்ள ஜெயஸ்ரீநகரில் ரூ.1 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தற்போது பேரூராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு இருந்த மேற்கண்ட இடத்தில், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டால் விவசாயிகளும், சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இது குறித்து அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் எதுவும் நடத்தப்பட வில்லை எனவும், எனவே ஜெயஸ்ரீ நகரில் எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டத்தை பேரூராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருங்கிணைப்பாளர் லியோ சேகர் தலைமையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்து விட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்