கிருஷ்ணகிரி
ஓசூரில்பா.ஜனதா கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்
|ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி 40-வது வார்டுக்குட்பட்ட பெரியார் நகரில் கடந்த 20 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று பெரியார் நகர் முருகன் கோவில் அருகே பா.ஜ.க.வினர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் பெரியார் நகர் பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மாநகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பிரச்சினைக்கு தீர்வு கண்டு சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.