< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பாலக்கோட்டில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|27 March 2023 12:30 AM IST
பாலக்கோடு:
பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டதையும் கண்டித்தும் நகர தலைவர் தக்காளி கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், வட்டார தலைவர் ராஜேந்திரன், வட்டார செயலாளர் பொன்னையன், மாரண்டஅள்ளி நகர தலைவர் பால பார்கவன். நகர துணைத்தலைவர் பாலாஜிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர் செந்தில், நிர்வாகி சீதாராமன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.