< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அரூரில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|10 March 2023 12:30 AM IST
அரூர்:
அரூரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் வஜ்ஜிரம் தலைமை தாங்கினார். நகர தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட துணை தலைவர்கள் சிவலிங்கம், அப்பாவு கவுண்டர், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் மோகன், வைரவன், அருள்ஜோதி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.