< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஊத்தங்கரையில்விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|8 March 2023 12:30 AM IST
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். விவசாய கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இலவச வீடு வழங்க வேண்டும். தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தில் ஊதியமாக ரூ.281 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் ராஜகோபால், மாநில குழு உறுப்பினர் கண்ணு, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், மூத்த நிர்வாகி வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.