< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|8 March 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராஜாமணி தலைமை தாங்கினார். உமாராணி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயா பேசினார்.
மாதர் சங்க நிர்வாகிகள் தெய்வானை, அஞ்சலி, பழனியம்மாள், ஜெயந்தி, அம்மு, பார்வதி, சிவகாமி, ராதா உள்ளிட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு பட்டை நாமம் தீட்டியும் மாலை அணிவித்தும் வைத்திருந்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வரலட்சுமி நன்றி கூறினார்.