நாமக்கல்
ராசிபுரத்தில்நகர தெரு வியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
|ராசிபுரம்:
ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தையொட்டி நகர தெரு வியாபார தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் அவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையொட்டி நகர தெரு வியாபார தொழிலாளர்கள் பஸ் நிலையத்தையொட்டி உள்ள பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ தலைவர் மணிவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கட்டுமான சங்க செயலாளர் கிருஷ்ணசாமி, சைசிங் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செங்கோட்டையன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மீனா, ராசிபுரம் கட்டுமான சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றகோரி நகராட்சி தலைவர் கவிதா சங்கர், ஆணையாளர் அசோக்குமார் ஆகியோரிடம் மனுக்களை அளித்தனர்.