< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்   சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
15 July 2022 5:10 PM GMT

நாமக்கல்லில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் தமிழரசி, சந்திரசேகரன், இணை செயலாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நடேசன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் ஓய்வு பெறும்போது அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையல் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லஞ்சமும் ஒட்டுமொத்த தொகையாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்