< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
12 July 2022 2:06 PM GMT

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 1.1.2022 முதல் 3 சதவீத அகவிலைபடியை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப நல நிதியை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்கிற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில இணை செயலாளர் நல்லாக்கவுண்டர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மாவட்ட செயலாளர் கணபதி, பொருளாளர் அண்ணாத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்