நாமக்கல்
புதுச்சத்திரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|புதுச்சத்திரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல்:
நூல் விலை உயர்வை கண்டித்து புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூர் மாரியம்மன் கோவில் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஏளூர் வார்டு உறுப்பினர் ஜோதிமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் கந்தசாமி. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ராசிபுரம் தெற்கு பிரதேச செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது விசைத்தறி தொழிலை பாதுகாத்திட மத்திய அரசு பருத்தி மற்றும் நூல்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். பருத்தி ஏற்றுமதியை தடுத்து நிறுத்த வேண்டும். பருத்தி நூல் பதுக்கலை தடுக்க வேண்டும். வேலையிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் தோறும் நூல் வங்கிகளை அமைத்து மானிய விலையில் விசைத்தறிகளுக்கு நூல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.