< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 May 2022 11:35 PM IST

நாமக்கல்லில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல்:

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர், வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு என கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் இளவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில துணை தலைவர் செல்வராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்