< Back
மாநில செய்திகள்
பள்ளிபாளையம், எலச்சிபாளையத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பள்ளிபாளையம், எலச்சிபாளையத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 May 2022 11:17 PM IST

பள்ளிபாளையம், எலச்சிபாளையத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பள்ளிபாளையம்:

கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட இடதுசாரி கட்சிகள் சார்பில் பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலைக்கே பருப்பு, சமையல் எண்ணெயை பிற கடைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மோகன் மற்றும் கதிரவன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

எலச்சிபாளையம்

எலச்சிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் ரங்கசாமி, சுரேஷ், செங்கோட்டுவேல், யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்