< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 May 2022 11:10 PM IST

ராசிபுரத்தில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம்:

ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் ஆதவன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் செங்கோட்டுவேல், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கல்வி செயலாளர் குமணன், ராசிபுரம் நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ராசிபுரம் நகர துணை செயலாளர் சுகுவளவன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்