< Back
மாநில செய்திகள்
மாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: போலீஸ் நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை
நாமக்கல்
மாநில செய்திகள்

மாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: போலீஸ் நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை

தினத்தந்தி
|
27 May 2022 11:02 PM IST

மாரியம்மன் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மலைவாழ் மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சேந்தமங்கலம்:

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

கொல்லிமலை ஒன்றியம் வளப்பூர் நாடு ஊராட்சி பிளான்டூர்பட்டியில் சுமார் 5½ ஏக்கர் பரப்பளவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிளாண்டூர்பட்டி, செல்லிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் அவரிடம் கேட்டப்போது, இருதரப்புக்கும் வாக்குவாதம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று கூறி நோட்டீசு ஒட்டினர்.

முற்றுகை

இந்தநிலையில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் செய்திகள்