< Back
மாநில செய்திகள்

தர்மபுரி
மாநில செய்திகள்
தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

11 Oct 2023 12:30 AM IST
பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் இளவேனில், ஜாக்டோ- ஜியோ நிதி காப்பாளர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட செவிலியர்களை விடுதலை செய்ய வேண்டும். சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.