< Back
மாநில செய்திகள்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில்தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில்தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

தினத்தந்தி
|
21 Sept 2023 12:30 AM IST

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 150 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் சம்பளம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் தூய்மை பணியாளர் சுதா என்பவரை மேற்பார்வையாளர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அந்த மேற்பார்வையாளரை கைது செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நேற்று அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு மற்றும் தாசில்தார் சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் இரவு வரை நீடித்தது.

மேலும் செய்திகள்