< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ராசிபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
|22 Aug 2023 12:30 AM IST
ராசிபுரம்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்கள் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி மத்திய அரசால் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றியமைத்து புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும் அதனை முழுமையாக எதிர்த்தும் ராசிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் செல்வகுமார், தங்கதுரை, செயற்குழு உறுப்பினர்கள் சேகர், ஹரிஹரசுதன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் புதிய சட்ட வரையறுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.