< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமகிரிப்பேட்டையில்இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
|18 July 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டை:
இந்து முன்னணி அமைப்பு சார்பில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன்படி நாமகிரிப்பேட்டை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.