< Back
மாநில செய்திகள்
மசாஜ் சென்டரில் விபசாரம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மசாஜ் சென்டரில் விபசாரம்

தினத்தந்தி
|
28 Sept 2023 1:00 AM IST

பீளமேட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்தது.

பீளமேடு

கோவை ராமநாதபுரம் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ்(வயது 30). எலெக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த ஒரு நபர், இங்குள்ள ஒரு மசாஜ் சென்டரில் அழகிகள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 4 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் மசாஜ் சென்டரை நடத்தி வந்த புலியகுளத்தை சேர்ந்த ஸ்ரீஹரி(47) என்பவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்