< Back
மாநில செய்திகள்
மசாஜ் சென்டரில் விபசாரம்; 3 பேர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மசாஜ் சென்டரில் விபசாரம்; 3 பேர் கைது

தினத்தந்தி
|
5 Oct 2023 3:00 AM IST

கோவை காந்திபுரத்தில் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டார்.



கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 5-வது வீதியில் ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக புகார் வந்தது. காட்டூர் போலீசார் அங்கே சென்று சோதனை செய்தனர்.


அப்போது கோவை, திருப்பத்தூர் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 3 இளம் பெண்களை வைத்து மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தி வந்த மதுரையை சேர்ந்த மசாஜ் சென்டர் மேலாளர் ஜெயபிரகாஷ் (வயது 27), ஊழியர்களான திருப்பூரை சேர்ந்த நவீன் குமார் (26) புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டியராஜ் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மசாஜ் சென்டரில் விபசாரத்துக்கு ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மாத சம்பளம் கொடுத்து இளம் பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது.


மேலும் செய்திகள்