< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
வீட்டில் விபசாரம்; பெண் கைது
|28 May 2023 12:15 AM IST
புளியங்குடியில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
புளியங்குடி:
புளியங்குடி இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து விபசாரம் நடப்பதாக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுரேஷ், அவருடைய மனைவி தமிழரசி ஆகியோர் கோயம்புத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அங்கிருந்த தமிழரசியை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சுரேசை வலைவீசி தேடி வருகின்றனர். இதுதவிர விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.