நாகப்பட்டினம்
வீடு, கடைகளுக்கு நிபந்தனைகளுடன் சொத்துவரி
|வீடு, கடைகளுக்கு நிபந்தனைகளுடன் சொத்துவரி
அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள வீடு, கடைகளுக்கு நிபந்தனைகளுடன் சொத்துவரி விதிக்கப்படுகிறது என்று கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.
பேரூராட்சி கூட்டம்
கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி துணைத்தலைவர் சந்திரசேகரன், செயல் அலுவலர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்வேளூர் பேரூராட்சியில் வருவாயை பெருக்குவதற்கு பேரூராட்சி கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள வீடு மற்றும் கடைகளுக்கு நிபந்தனைகளுடன் சொத்து வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி விதிக்கப்படுவதாக செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.
கணக்கெடுப்பு குறித்து விவாதம்
கூட்டத்தில் தனியார் பங்களிப்புடன் கழிவறைகள் பராமரிப்பு மற்றும் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் மீனாட்சி, அகிலா, மகேஸ்வரன், ராதிகா, அகல்யா, காந்திமதி, பழனிவேல், ராஜாத்தி, ரமேஷ்குமார், ஷாஜஹான், இலக்கிய லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் சித்ரகலா நன்றி கூறினார்.