< Back
மாநில செய்திகள்
ரூ.60 லட்சம் சொத்து வரி பாக்கி: சென்னை அருகே 2 தியேட்டர்களுக்கு சீல்
மாநில செய்திகள்

ரூ.60 லட்சம் சொத்து வரி பாக்கி: சென்னை அருகே 2 தியேட்டர்களுக்கு சீல்

தினத்தந்தி
|
19 Sept 2024 12:59 PM IST

சென்னை அருகே நங்கநல்லூரில் 2 தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அருகே நங்கநல்லூரில் செயல்பட்டுவந்த வெற்றிவேல் மற்றும் வேலன் தியேட்டர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

2018-ல் இருந்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.60 லட்சம் வரி தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியும், பலமுறை நேரில் சென்று கூறியும் வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று இரண்டு தியேட்டர்களுக்கும் சென்ற சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள், அங்கிருந்த ஆட்களை வெளியேற்றி மின்சார இணைப்புகளைத் துண்டித்தனர். மேலும் இரண்டு தியேட்டர்களின் முகப்புகளுக்கும் சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்