சேலம்
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை
|பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கனககிரியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கனககிரியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
கிராமசபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், கனககிரி ஊராட்சி செட்டியார்காட்டில் கிராமசபை கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற முன்னேற்றத்திற்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சல், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கருணாநிதி வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கோரிக்கை மனுக்கள்
மேலும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கிராம சபை கூட்டத்தில் உதவி கலெக்டர் சவுமியா, முதன்மை கல்வி அலுவலர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வமணி, ஊராட்சி உதவி இயக்குனர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா, கனககிரி ஊராட்சி தலைவர் பட்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.