< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி பெண் அளித்த மனுவுக்கு உடனடி தீர்வுகுறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் நடவடிக்கை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண் அளித்த மனுவுக்கு உடனடி தீர்வுகுறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் நடவடிக்கை

தினத்தந்தி
|
21 Aug 2023 8:15 PM GMT

மாற்றுத்திறனாளி பெண் அளித்த மனுவுக்கு உடனடி தீர்வு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் நடவடிக்கை

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். முகாமில் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கோரி 26 போ் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அவற்றை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

கூட்டத்தில் நாகர்கோவில் பரப்புவிளையை சேர்ந்த மாரி செல்வி என்ற மாற்றுத்திறனாளி தனக்கு சக்கரங்கள் கொண்ட மடக்கு நாற்காலி வேண்டும் மனு அளித்தார். இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினா்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளி பெண் மாரி செல்வி மனு அளித்த ½ மணி நேரத்திற்குள் அவருக்கு மடக்கு சக்கர நாற்காலியை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். இதனை கண்ட பொதுமக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை பாராட்டினர். இதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்கள், சக்கர நாற்காலிகளும் என மொத்தம் 51 பேருக்கு ரூ.9 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்